கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் புனலூர் என்ற ஊரைச் சார்ந்த திரு. பத்மநாபன் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த திருமதி.பவானி தம்பதியரின் 4-வது மகனாக நமது மாவட்ட 2-ம் துணை ஆளுநர் லயன் டாக்டர் T.P. ரவீந்திரன் MJF அவர்கள் 20-03-1962 அன்று பிறந்தார்.
மத்திய அரசின் தொலைதொடர்பு துறையில் பணி செய்வதற்காக மலைகளின் இளவரசியாம் கொடைக்கானலுக்கு வந்தார். படிப்படியாக தன் திறமைகளை வளர்த்து கொண்டு சொந்தமாக 1987-ல் சன் பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை துவக்கி 2007-ல் மத்திய அரசின் பதிவு பெற்று கட்டிடக்கலையில் தலைச்சிறந்து வலம் வருகிறார். சன் ரியல் எஸ்டேட் தொழிலில் கால்பதித்து வெற்றி கண்டார். சன் பில்டர்ஸ் மூலம் கொடைக்கானலில் கல்வி நிறுவனங்;களையும் எண்ணற்ற எழில்மிகு பங்களா மற்றும் அலுவலகங்களையும் கட்டித்தந்து வருகிறார். வாஸ்து சயின்சில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
Lion. T.P.ரவீந்திரன் அவர்களின் மனைவி Lion ஆஷா ரவீந்திரன் இவர்களது திருமணம் 16.07.1987 அன்று நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு 2 மகன்கள்.
மூத்தவர். ஆர்க்கிடெக்ட் Lion, அருண் ரவீந்திரன் பிளேயர் ஆர்க்கிடெக்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி தீபா அருண் ரவீந்திரன் M.Sc. பட்டதாரி. இவர்களின் புதல்வன் ஆருஷ் அருண் ரவீந்திரன 2-வது மகன் Lion பொறியாளர் கிரண் ரவீந்திரன் M.S., (U.K) பட்டம் பெற்றவர். இவரது மனைவி டாக்டர். நீத்து கிரண் ரவீந்திரன் M.B.B.S பட்டம் பெற்றவர்.
மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானல் என்றென்றும் பசுமையாக இருக்க தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநில ஆளுநர்கள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நீதி அரசர்கள், திண்டுக்கல் மாவட்;ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை கொண்டு மரம் நடும் நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதற்காக Lion T.P.ரவீந்திரன் அவர்களை தமிழ்நாடு அரசு சென்னையில் அரசாங்க காசோலையும் விருதும் வழங்கி பாராட்டியது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்தவர் என்று அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. வெங்கடாச்சலம் IAS Lion T.P.ரவீந்திரன் அவர்களை பாராட்டினார். குடியரசு தின விழாவின் போது மாவட்ட ஆட்சியர் திரு. வள்ளலார் IAS அவர்கள் 'சிறந்த சமூக சேவகர்' என்ற விருதை Lion T.P.ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
மலேசியாவில் மலேசிய உலக தமிழ் மாநாட்டில் 'சிறந்த சமூக சேவகர்' என்ற விருதையும், டெல்லியில் டெல்லி தமிழ்ச்சங்க விருதையும் Lion.T.P.ரவீந்திரன் அவர்கள் பெற்றுள்ளார். காஞ்சி மாடாதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள் ரவீந்திரனின் பணிகளை பாராட்டி கௌரவித்துள்ளனர்.
கொடைக்கானலில் மூன்று இடங்களில் கிணறு வெட்டி மக்களின் தண்ணிர் தேவைளை தீர்த்து வைத்துள்ளார். ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட தமிழ் வழி கல்வி கற்கும் மாணவ மாணவியருக்கும், 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி கல்வி தொண்டும் புரிந்து வருகிறார்.
'கொடைக்கானல் 12-வது வார்டு பொது நலச்சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி பல குடும்பங்களுக்கு உதவி வருகிறார். இவரது மனைவி Lion ஆஷா ரவீந்திரன் கொடைக்கானல் நகர் மன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.
கோடைபிரின்ஸ் என்ற லயன்ஸ் சங்கத்தில் 1993 ஆம் ஆண்டு இணைந்த LionT.P.ரவீந்திரன் அவர்கள் 2008-ம் ஆண்டு கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கத்தை துவக்கி அதன் பட்டய தலைவராக பொறுப்பேற்றார். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து உள்ளார்.
கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கத்தின் தலைவராக Lion T.P. ரவீந்திரனின் மனைவி ஆஷா ரவீந்திரன் மகன்கள் அருண் ரவீந்திரன், கிரண் ரவீந்திரன் ஆகியோர்க்கும் பொறுப்பு வகித்துள்ளனர். Lion T.P. ரவீந்திரன் மருமகள்கள் தீபு அருண் ரவீந்திரன் டாக்டர் நீத்து கிரண் ரவீந்திரன் ஆகியோர் சங்கத்தில் இயக்குனர்களாக இருந்து குடும்பத்துடன் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள்.
© 2017 Sun Builders. All rights reserved